

மத்திய அரசுக்கு ஆதரவு
அமெரிக்காவை சோந்த பாப் பாடகி ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டர் தன்பர்க் ஆகியோர் சமீபத்தில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக டுவிட்டரில் கருத்து கூறியிருந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்டவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவு தொவிக்கும் வகையில் டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு
இந்தநிலையில் நேற்று முன்தினம் சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரை சேர்ந்த ரஞ்சீத் பாகல் என்ற வாலிபர், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் வீட்டின் முன், விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் எப்போது கருத்து கூறுவீர்கள் சச்சின்?' என்ற பதாகையுடன் நின்றுகொண்டு இருந்தார்.
வாலிபர் பதாகையுடன் நிற்கும் அந்த படத்தை டுவிட்டரில் பகிந்து உள்ள மும்பையை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி செய்தி தொடர்பாளர் பிரீத்தி சர்மா மேனன், சச்சின் விவசாயிகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் ஒரு முறை கருத்து பகிர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் இது தொடர்பாக சச்சின் தெண்டுல்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.