விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டாம் - சத்குரு ஜக்கி வாசுதேவ்

மண்ணையும், மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டாம் - சத்குரு ஜக்கி வாசுதேவ்
Published on

புதுடெல்லி,

மண்ணையும், மண் வளத்தையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை என ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

மண் வளத்தை பாதுகாப்பது குறித்த பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்கு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துள்ள தாய்ப்பாலை கொடுப்பதுபோல, மனிதர்களுக்கு மிகப்பெரிய ஊட்டச்சத்தாக இருப்பது மண் மட்டுமே.

விவசாயிகளுக்கு விவசாயம் எப்படி செய்ய வேண்டும் என நகரத்தில் வாழ்கின்றவர்கள் பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அதனை விவசாயிகளே முடிவு செய்வார்கள்" என்றார்.

மண் வளம் காப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக தற்போது 100 நாள், 30,000 கிமீ பயணத்தில் இருக்கும் சத்குரு, ஜூன் 7-ஆம் தேதி லக்னோவைச் சென்றடைகிறார். இந்த இயக்கத்தின் செய்தியை மேலும் பரப்ப, அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உடன் பொது நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com