மிஸ் இந்தியா பட்டம் வென்ற சாத்வி

மிஸ் இந்தியா பட்டம் வென்ற சாத்வி சதீஷ் சைல் கூறுகையில், "இது கனவு போல உள்ளது. உலக மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமை" என்று தெரிவித்தார்.
மிஸ் இந்தியா பட்டம் வென்ற சாத்வி
Published on

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் 75-வது மிஸ் இந்தியா-2026 போட்டி பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் 30 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்களை பின்னுக்கு தள்ளி கோவாவை சேர்ந்த சாத்வி சதீஷ் சைல் (நடுவில் இருப்பவர்) மிஸ் இந்தியா-2026 பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

இந்த போட்டியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ராஜ்நந்தினி பவார் (வலதுபுறம் இருப்பவர்) 2-வது இடத்தையும், ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஸ்ரீ அத்வைதா (இடதுபுறம் இருப்பவர்) 3-வது இடத்தையும் பெற்றனர்.

வெற்றிக்கு பின்னர் சாத்வி சதீஷ் சைல் கூறுகையில், "இது கனவு போல உள்ளது. உலக மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமை" என்று தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com