

திருப்பதி,
ரக்ஷ பந்த நாளில் இறந்த சகோதரரின் கையில் தங்கை ராக்கி கயிறு கட்டிய சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
ரக்ஷா பந்தன் நாளில் ஒவ்வொரு சகோதரிகளும் தாங்கள் சகோதரர்களாக பார்க்கும் நபர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்துவார்கள். அதற்கு ஒவ்வொரு சகோதரனும் ஆசீர்வாதத்துடன், வாழ்க்கையின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பேன் என நம்பிக்கையளிக்கும் வகையில் இந்த நாள் பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், குரவியை சேர்ந்தவர் வீரண்ணா. இவரது மகன் ரமேஷ் (வயது 36). வீரண்ணா கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தார்.
இந்நிலையில் வீரண்ணாவின் மகன் ரமேஷும் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். நேற்று ரமேஷின் இறுதி சடங்கிற்காக அவரது உடல் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த ரமேசின் தங்கை தனலட்சுமி ராக்கி கயிறு கட்டுவதற்கு முன்பே இறந்து விட்டாயா அண்ணா என்று கதறி அழுதபடி அவரது கையில் ராக்கி கயிறு கட்டினார்.
இந்த நிகழ்வு அங்கிருந்த வர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 10 நாட்களுக்குள் தந்தையும் மகனும் அடுத்தடுத்து இறந்து போனதால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.