பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய விளையாட்டு கழக கபடி பயிற்சியாளர் ஓட்டலில் தற்கொலை

பெங்களூருவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய விளையாட்டு கழக கபடி பயிற்சியாளர் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய விளையாட்டு கழக கபடி பயிற்சியாளர் ஓட்டலில் தற்கொலை
Published on

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இந்திய விளையாட்டு கழக மையம் ஒன்று அமைந்துள்ளது. பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் இங்கு கபடி விளையாட்டுக்கான மூத்த பயிற்சியாளராக இருந்து வந்தவர் ருத்ரப்பா ஹோசாமணி (வயது 59).

இந்த நிலையில் கடந்த 9ந்தேதி பயிற்சி மையத்தின் பெண்களுக்கான உடை மாற்றும் அறையில் டீன் ஏஜ் சிறுமியிடம் ஹோசாமணி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்திய விளையாட்டு கழக அதிகாரிகளுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரினை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஹரிஹரா பகுதியில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிய அவர் அதன்பின் நீண்ட நேரம் வெளியே வரவில்லை. இதுபற்றி ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபொழுது ஹோசாமணி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுபற்றி ஹோசாமணியின் தந்தையும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com