வறுமையை மனநிலை என்றவர்தானே..! ராகுலை விளாசிய நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தார்.
வறுமையை மனநிலை என்றவர்தானே..! ராகுலை விளாசிய நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்தார். மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலுரை ஆற்றிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

இதே அவையில் கடந்த 2013- ஆம் ஆண்டு பேசிய உங்கள் தலைவர், வறுமை என்பது உணவு, பணம், பொருட்களின் பற்றாக்குறை அல்ல. அது ஒரு மனநிலை. ஒருவருக்கு தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் அவர் ஏழ்மையை வெல்லலாம் என்று பேசியவர்தான். அவரது பெயரை நான் இங்கு குறிப்பிடவில்லை. இந்த வறுமையைப் பற்றிதான் உங்களின் எம்.பி. இப்போது பேசினாரா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன் என ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினார்.

நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசும் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எனினும், அதை பொருட்படுத்தாத நிர்மலா சீதாராமன் தனது உரையை முடித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com