மான் வேட்டையாடிய வழக்கு: நடிகர் சல்மான் கான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு

மான்வேட்டையாடிய வழக்கில் பிரபல நடிகர் சல்மான் கான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மான் வேட்டையாடிய வழக்கு: நடிகர் சல்மான் கான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு
Published on

ஜோத்பூர்,

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் (வயது 49). இவர் 1998ம் ஆண்டு, ஹம் சாத் சாத் ஹெய்ன் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர்.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை நேரில் ஆஜராகி வைக்க வேண்டும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நடிகர் சல்மான் கான் மற்றும் இவருடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராவதிலிருந்து ஜோத்பூர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. மேலும் வழக்கு ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக நடிகர்கள் கோர்ட்டில் ஆஜராக வரும்போது போதுமான பாதுகாப்பு அளிப்பது கடினம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com