சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்தது தொடர்பாக, உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு: உத்தரபிரதேச அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் சியூர் அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவின்போது சப்பாத்தியும் அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவியது. இதுதொடர்பாக மாநில அரசு 2 ஆசிரியைகளை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், தலைமை செயலாளர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com