சாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சு: அசாம் முதல்-மந்திரி பதிலடி

சாம் பாய், நாம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ளோம் என்று அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
சாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சு: அசாம் முதல்-மந்திரி பதிலடி
Published on

கவுகாத்தி,

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும் எனக் கூறியிருந்தார். இவரது இந்த கருத்து தற்போது சர்ச்சை ஆகி உள்ளது. இவரது கருத்திற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சாம் பிட்ரோடாவின் கருத்துக்கள் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாட்டு மக்களையும் அவமதித்துள்ளதாக பா.ஜனதா கூறியுள்ளது. இந்த நிலையில் அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில்,

சாம் பாய், நான் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவன். நான் இந்தியன் போன்று தோற்றமளிக்கிறேன். நாம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உள்ளோம். நாம் மாறுபட்டதாக தோன்றுகிறோம். ஆனால் எல்லோரும் ஒன்றுதான் என பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com