சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி: எண்ணெயும், தண்ணீரும் எப்படி கலக்கும்?- யோகி ஆதித்யநாத் கேள்வி

எண்ணெயும், தண்ணீரும் எப்படி கலக்கும் என சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி குறித்து யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.
சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கூட்டணி: எண்ணெயும், தண்ணீரும் எப்படி கலக்கும்?- யோகி ஆதித்யநாத் கேள்வி
Published on

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வந்த சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் சமீப காலமாக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலிலும் ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் மகா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன.

இந்த கூட்டணியின் உறுதித்தன்மை குறித்து மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக லக்னோவில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் மகா கூட்டணி எதிரெதிர் கட்சிகளின் கூட்டணி. அதனால் வெற்றி பெற முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களை ஏற்க போவதில்லை. எண்ணெயும் தண்ணீரும் எப்படி கலக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து இருப்பதுடன், உலக அளவில் மிகப்பெரும் சக்தியாக உருமாறி இருப்பதாக கூறிய யோகி ஆதித்யநாத், ஒரு வலிமையான, வளமான இந்தியாவை விரும்புபவர்கள் மோடியை 2-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரிக்கிறார்கள் என்றும் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் 74 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் என்றும் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com