‘உஜ்வாலா யோஜனா’ திட்டம் என்னவானது? பா.ஜனதா தலைவர் வீடியோவை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பா.ஜனதா தலைவர் சம்பித் பத்ரா வெளியிட்ட வீடியோவை வைத்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.
‘உஜ்வாலா யோஜனா’ திட்டம் என்னவானது? பா.ஜனதா தலைவர் வீடியோவை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்
Published on

பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா ஒடிசா மாநிலம் பூரி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் சம்பித் பத்ரா, அங்குள்ள ஏழை குடும்பத்திற்கு சென்று உணவு அருந்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை இப்போது முன்வைத்து வருகின்றன. வீடியோவில் தரையில் அமர்ந்து, வாழை இலையில் உணவு அருந்துகிறார். வீட்டில் இருப்பவர்களுக்கும் உணவை ஊட்டிவிடுகிறார். இதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் இந்தி மற்றும் ஒடிய மொழியில் வெளியிட்டார்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா என்ற இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் தன்னுடைய வெற்றி திட்டங்களில் ஒன்று என்று மத்திய பா.ஜனதா அரசு கூறியுள்ளது.

ஆனால் சம்பித் பத்ரா உணவு சாப்பிட்ட வீட்டில் பெண் சமைக்கையில் மண் அடுப்பில் சமைக்கிறார். இது வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதனை மையப்படுத்தி, உஜ்வாலா யோஜனா திட்டம் வெற்றியென்று முழக்கமிட்டீர்கள், ஆனால் சம்பித் பத்ரா சாப்பிட்ட வீட்டில் சிலிண்டர் இருப்பதற்கான எந்தஒரு தடயமும் இல்லையே எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி டுவிட்டர்வாசிகளும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com