போதைப்பொருள் வழக்கு: என்.சி.பி அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம்

மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.
போதைப்பொருள் வழக்கு: என்.சி.பி அதிகாரி சமீர் வான்கடே பணியிட மாற்றம்
Published on

மும்பை,

மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது ஆர்யன் கான் உள்ளிட்டோருக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, ஆர்யன் கானை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், என்.சி.பி அதிகாரி சமீர் வன்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மூத்த போலீஸ் அதிகாரி சஞ்செய் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு, ஆர்யன்கான் உள்பட ஏனைய 4 பேர் மீதான போதைப் பொருள் வழக்கை விசாரிக்க உள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com