மறைந்த ரத்தன் டாடாவுக்கு ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

ரத்தன் டாடாவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்று மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.
மறைந்த ரத்தன் டாடாவுக்கு ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்
Published on

பூரி,

பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ரத்தன் டாடாவின் உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் ரத்தன் டாடாவின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் சிற்பத்தை செய்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன், "ரத்தன் டாடாவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com