ஜனாதிபதியுடன் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சந்திப்பு


ஜனாதிபதியுடன் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் சந்திப்பு
x

2025-ம் ஆண்டுக்கான சர்வதேச மணல் சிற்ப திருவிழாவில் பட்நாயக்கிற்கு, இங்கிலாந்து மணல் சிற்ப நிபுணருக்கான விருது வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் இன்று சந்தித்து பேசினார். இந்தியாவின் 4-வது உயரிய விருது என கூறப்படும் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பட்நாயக், ஒடிசாவின் பூரி பீச்சில் மணல் சிற்ப பள்ளிக்கூடம் ஒன்றை அவர் நடத்தி வருகிறார்.

அவர் பிளாஸ்டிக் மாசுபாடு, கொரோனா பாதிப்பு, பயங்கரவாதங்களை தடுத்து நிறுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விசயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

உலகம் முழுவதும் 65 சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் திருவிழாக்களில் அவர் பங்கேற்றுள்ளார். அவருடைய பணிக்காக எண்ணற்ற பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், கலை வடிவுக்கு பங்காற்றியதற்காக, இங்கிலாந்தில் கடந்த 5-ந்தேதி அவருக்கு தி பிரெட் டாரிங்டன் என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. வெய்மவுத் நகரில் நடந்த 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச மணல் சிற்ப திருவிழாவில் பட்நாயக்கிற்கு, இங்கிலாந்து மணல் சிற்ப நிபுணருக்கான விருது வழங்கப்பட்டது.

இதனை குறிக்கும் வகையில், உலக அமைதி என்ற செய்தியுடன், கடவுள் விநாயகரின் 10 அடி உயர மணல் சிற்பம் ஒன்றையும் அவர் உருவாக்கினார். இந்நிலையில், ஜனாதிபதியுடன் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் சந்திப்பு நடந்துள்ளது.

1 More update

Next Story