மனைவி கோபித்து கொண்டு சென்றதால் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப பிரச்சினையில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மனைவி கோபித்து கொண்டு சென்றதால் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சிக்கமகளூரு:

தூய்மை பணியாளர்

சிக்கமகளூரு டவுன் சங்கர்புரா பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 32). தூய்மை பணியாளர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் உண்டானது.

அப்போது ஹரீசிடம் கோபித்து கொண்டு அவரது மனைவி, பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி மனைவியை ஹரீஷ் அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி வர மறுத்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் ஹரீஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் ஒரு அறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மலும் வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஹரீஷ், தூக்கில் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஹரீசுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் அவரது மனைவி கோபித்து கொண்டு சென்றதாலும், குடும்பம் நடத்த வர மறுத்ததாலும் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com