நகரம் சுகாதாரமாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம்; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பேச்சு

நகரம் சுகாதாரமாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம் என முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
நகரம் சுகாதாரமாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம்; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பேச்சு
Published on

சிவமொக்கா;

சிவமொக்கா டவுனில் உள்ள குவெம்பு கலையரங்கில் நேற்று தூய்மை பணியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்டத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது;-

கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை நிரந்தர ஊழியர்களாக நியமித்து ஆணை வெளியிட்டுள்ளார். ஒரு நகரம் சுகாதாரமாக இருக்க நீங்களே முதல் காரணம்.

உங்கள் வாழ்வு வளம் பெற பா.ஜனதா அரசு உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தரும். இவ்வாறு அவர் பேசினார். இதில் நிகழ்ச்சியில் ராகவேந்திரா எம்.பி., மாநகராட்சி மேயர் சுனிதா அண்ணப்பா, துணை மேயர் சங்கர் கன்னி மற்றும் பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com