100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமினில் விடுதலையானார் சஞ்சய் ராவத்...!

பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பிக்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமினில் விடுதலையானார் சஞ்சய் ராவத்...!
Published on

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ந் தேதி (இன்று) வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சஞ்சய் ராவத், விடுதலை ஆனதை தொடந்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் சிறையில் வெளியே வந்த சஞ்சய் ராவத்துக்கு சிவசேனா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com