சஞ்சய் ராவுத்தின் நீதிமன்றக் காவல் 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு

சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சஞ்சய் ராவுத்தின் நீதிமன்றக் காவல் 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு
Published on

மும்பை,

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத். எம்.பி.யான சஞ்சய் ராவத் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆதரவாளராவார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி, கடந்த மாதம் பத்ராசால் நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப் பலன்கள் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற காவலில் உள்ள சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், சஞ்சய் ராவுத்தின் நீதிமன்றக் காவல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து, ஜாமீன் மனு மீதான விசாரணையும் அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com