குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அவமதிப்பு

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலை குஜரத்தில் அவமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #StatuePolitics
குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அவமதிப்பு
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் ஷெர்தா கிராமத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அவமதிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், நள்ளிரவில், அந்த சிலைக்கு காலி குளிர்பான பாட்டில்களையும், புற்களையும் மாலையாக போட்டிருந்தனர்.

நேற்று காலை, அப்பகுதி மக்கள் அக்காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சிலையை அவமதித்தவர்களை பிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர். சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சிலை, கடந்த 1992ம் ஆண்டு பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியால் திறந்து வைக்கப்பட்டது ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com