சேலை நன்றாக இல்லை... திருமணமே வேண்டாம் என நிறுத்திய மணமகள்; குடும்பத்தினர் கைகலப்பு

நிகியின் சகோதரர் ஜீத் நாத் கோண்ட், அவருடைய தாயார் உம்ராவதி தேவி மற்றும் மற்றொரு பெண்ணான லட்சுமி தேவி ஆகியோர் காயமடைந்தனர்.
Insert image: AI
Insert image: AI
Published on

பல்லியா

உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேவதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கெய்காட் கிராமத்தில் பஞ்சரூகி கோவிலில் திருமணம் ஒன்று நடக்க இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணமகன் மற்றும் மணமகள் என இரு வீட்டாரும் சேர்ந்து சிறப்பாக செய்தனர்.

இதில், தலன் சாப்ரா கிராமத்தில் வசிக்கும் அஜய் கோண்ட் மகள் நிகி மற்றும் மஹாதானபூர் கிராமத்தில் வசிக்கும் பவன் கோண்ட் மகன் விஷால் கோண்ட் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கொண்டு வந்திருந்த சேலை நன்றாக இல்லை என கூறி, அதனை கட்ட முடியாது என்று மணமகள் மறுத்திருக்கிறார். திருமண சடங்கிலும் பங்கேற்க அவர் மறுத்து விட்டார்.

இதனால், இரு குடும்பத்தினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நிகியின் சகோதரர் ஜீத் நாத் கோண்ட், அவருடைய தாயார் உம்ராவதி தேவி மற்றும் மற்றொரு பெண்ணான லட்சுமி தேவி ஆகியோர் காயமடைந்தனர்.

இதுபற்றி காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் முகமது பாஹிம் குரேஷி கூறும்போது, இதனால், திருமணம் நடைபெறாமல் நின்று போனது. அஜய் கோண்ட் அளித்த புகாரின் பேரில், மணமகன் விஷால், அவருடைய உறவினர்களான பவன், மனோஜ், ஹரேராம் மற்றும் அடையாளம் தெரியாத 4 முதல் 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com