கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் சரிதா நாயர்

கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக சரிதா நாயர் கூறியுள்ளார்.
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் சரிதா நாயர்
Published on

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கி பிரபலமானவர் சரிதா நாயர். இவ்வழக்கில் முதல்வராக இருந்த உம்மன் சாண்டி உள்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். சோலார் பேனல் தொடர்பான ஆலோசனைக்கு சென்ற போது உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் குற்றம் சாட்டினார். இப்போது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஹபி ஈடனுக்கு எதிராக எர்ணாகுளம் நாடாளுமன்ற தொகுதியில் சரிதா நாயர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

தேர்தலில் சில குற்றவாளிகள் போட்டியிடுகிறார்கள். அரசியல் பின்புலம் இருந்தாலும் குற்றவாளியாக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதி ஆகலாம். அவர்கள் போட்டியிடலாம் என்றால் நானும் போட்டியிடலாம் என சரிதா நாயர் கூறியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டு மக்களின் வாக்கை பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பது எல்லாம் என்னுடைய எண்ணம் கிடையாது. குற்றம் செய்தவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என கூறியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஹபி ஈடனுக்கு எதிராகவே தன்னுடைய போட்டியை நிர்ணயம் செய்துள்ள சரிதா நாயர் பிரசாரத்தின் போது மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com