பெங்களூர் சிறையில் சசிகலா, இளவரசிக்கு கட்டில், டி.வி., மின் விசிறி வழங்கப்பட்டது

பெங்களூர் சிறையில் சசிகலா, இளவரசிக்கு கட்டில், டி.வி., மின் விசிறி வழங்கப்பட்டது.
பெங்களூர் சிறையில் சசிகலா, இளவரசிக்கு கட்டில், டி.வி., மின் விசிறி வழங்கப்பட்டது
Published on

பெங்களூர்,

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சாதாரண கைதிகளுக்கு உரிய வசதியே அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் வருமான வரி செலுத்துவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து தங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்று கர்நாடக கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

இதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு சசிகலா, இளவரசிக்கு முதல் வகுப்பு சலுகைகள் அளிக்க உத்தர விட்டது. கோர்ட்டு உத்தரவு ஜெயில் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முதல் சசிகலா, இளவரசிக்கு ஜெயிலில் புதிய சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பி2 பிரிவில் உள்ள சசிகலா, இளவரசிக்கு டி.வி., கட்டில், மின் விசிறி, செய்திதாள்கள் வழங்கப்படுகிறது. வீட்டு உணவு வேண்டும் என்ற கோரிக்கையை கோர்ட்டு ஏற்க வில்லை. இதனால் வீட்டு உணவு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் தனக்கு எந்த வசதியும் வேண்டும் என்று கேட்கவில்லை. இதனால் அவருக்கு புதிய சலுகையோ, வசதியோ செய்து தரப்படவில்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com