சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடகா சிறைத்துறை தகவல்

சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடகா சிறைத்துறை தகவல்
Published on

பெங்களூரு,

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா உடல் நலம் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்திருந்தது. மேலும் சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சுயமாக உணவு எடுத்துக்கொள்வதாகவும், உதவியோடு எழுந்து நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சிறையில் சசிகலா விடுதலை தொடர்பான அனைத்து ஆவண பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com