செயற்கைகோள் தாக்கி அழிப்பு: இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு பிரதமர் மோடி நன்றி

விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைகோளை ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கும் சோதனை ஒன்று நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
செயற்கைகோள் தாக்கி அழிப்பு: இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு பிரதமர் மோடி நன்றி
Published on

புதுடெல்லி,

இந்திய பாதுகாப்பு துறையில் மற்றுமொரு மைல்கல் சாதனையாக, விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைகோளை ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கும் சோதனை ஒன்று நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. மிஷன் சக்தி என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றிக்காக ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) விஞ்ஞானிகளுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் தளத்தில், செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்காக டி.ஆர்.டி.ஓ.வுக்கு வாழ்த்துக்கள். டி.ஆர்.டி.ஓ.வின் புத்திசாலித்தனமான செயல்பாடுகள் தொடர்கிறது. மிஷன் சக்தியின் வெற்றி அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையை கொடுத்துள்ளது. இதன் மூலம் நமது திறன் மேலும் வலுவடைந்திருக்கிறது. ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்போல பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கிரிக்கெட் வீரர் தவான், நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரும் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். பிரணாப் முகர்ஜி போன்ற அரசியல் மேதையிடம் இருந்து கிடைத்த பாராட்டுகள் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் என்ஜினீயர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com