கொச்சி விமான நிலையத்தில் சாட்டிலைட் போன் பறிமுதல் - ஜெர்மனியை சேர்ந்தவர் கைது


கொச்சி விமான நிலையத்தில் சாட்டிலைட் போன் பறிமுதல் - ஜெர்மனியை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2024 7:44 PM IST (Updated: 19 Nov 2024 8:38 PM IST)
t-max-icont-min-icon

ஜெர்மனியை சேர்ந்த பயணியிடம் இருந்து சாட்டிலைட் போனை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்வதற்காக வந்திருந்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆத்மான் கிளாசிங்கோ என்பவரின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பயணியிடம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போன் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த நபர் கடந்த 5-ந்தேதி விமானம் மூலம் பெங்களூரு வந்து, பல இடங்களுக்கு பயணம் செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சாட்டிலைட் போனை பறிமுதல் செய்து, உடனடியாக அவரை நெடும்பச்சேரி போலீசாரிடம் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். சாட்டிலைட் போன்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது தனக்கு தெரியாது என ஆத்மான் கிளாசிங்கோ போலீசாரிடம் தெரிவித்துள்ளார். முன்னதாக இதே போல், கடந்த 3-ந்தேதி சென்னை விமான நிலையத்திற்கு சாட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story