சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு

சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
சவுதி அரேபிய பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு
Published on

புதுடெல்லி,

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த முகமது பின் சல்மானை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில் சவுதி இளவரசர் சல்மானுக்கு ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதைசெலுத்தினர். அதன்பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை முகம்மது பின் சல்மான் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி- சவுதி இளவரசர் சல்மான் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த ஆலோசனையின் போது, பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனையொட்டி, கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் சென்றார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் டாலர் மதிப்பிலான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இந்திய பயணத்துக்குப் பிறகு முகம்மது பின் சல்மான், சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com