"சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது கிடைத்தால்..."- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது கிடைத்தால்..."- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
Published on

மும்பை,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா மும்பை ஒர்லி பகுதியில் உள்ள நேரு மையத்தில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சுதந்திர போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர் பேசுகையில், “சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது கிடைத்தால், அது அந்த விருதுக்கே பெருமை சேர்க்கும். சாதி அடிப்படையிலான பாகுபாடு முழுமையாக நீங்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்,” என்றார்.

Also Read
கம்யூனிச சித்தாந்தத்தில் இருந்து நாடு விடுபட வேண்டும்; அமித்ஷா
"சாவர்கருக்கு பாரத் ரத்னா விருது கிடைத்தால்..."- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

மேலும், தனது பதவி குறித்து விளக்கமளித்த அவர், “75 வயதை கடந்த பிறகும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேண்டுகோளின்பேரில் தான் தலைவர் பதவியில் தொடர்கிறேன். அமைப்பு கேட்டால், எந்த நேரத்திலும் பதவியிலிருந்து விலகத் தயாராக இருக்கிறேன்,” என தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com