எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

மே 25,26-ல் வழக்கம் போல செயல்படும் என்று வங்கி சேவைகள் பாதிக்கப்படாது எனவும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
Published on

ஊழியர்கள் பற்றாக்குறைக்கு நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். வருகிற மே 25, 26 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர்.

ஏற்கனவே வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறையுடன் சேர்த்து வங்கி பணிகள் 4 நாட்கள் தொடர்ந்து முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் வங்கி நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: எங்களின் அனைத்து வங்கி கிளைகளும் மே 25,26ல் வழக்கம் போல செயல்படும். வங்கி சேவைகள் பாதிக்கப்படாது என்று 52 கோடி வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com