80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ

80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ குறைத்துள்ளது.#SBI
80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வட்டி விகிதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ
Published on

புதுடெல்லி,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. எஸ்.பி.ஐயின் இந்த நடவடிக்கையால், 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வட்டி விகிதத்தை 8.95 சதவீதத்தில் இருந்து, 8.65 சதவீதமாக எஸ்.பி.ஐ குறைத்துள்ளது. அதுபோலவே அடிப்படை முதன்மை கடன் வட்டி விகிதமும், 13.70 சதவீதத்தில் இருந்து 13.40


சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும் எம்எல்சிஆர் வட்டி விகிதத்தில் (டெபாசிட் உள்ளிட்டவற்றிக்கான வட்டி விகிதம்) மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதன்மூலம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர். இந்த வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.

இதுமட்டுமின்றி வீட்டுக்கடன் வாங்கும் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வேறு வங்கிகளில் பெற்ற வீட்டுக்கடன் கணக்கை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட வீட்டுக்கடனுக்கான பிராசஸிங் கட்டண ரத்து, வரும் மார்ச் வரை தொடரும் எனவும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு அளிக்கும் விதமாக எஸ்.பி.ஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. #SBI

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com