ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
Published on

புதுடெல்லி, 

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆஜரான சுப்பிரமணியசாமி, 'தனது மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே விரைந்து விசாரிக்க வேண்டும்' என கோரினார்.

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, 'ஒரு நீதிபதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், உங்களது மனுவை விசாரணைக்கு பட்டியலிட முடியவில்லை. விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுகிறோம்' என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com