

புதுடெல்லி,
கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் கடைகள் அமைக்க தடை விதித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.