போட்டித் தேர்வுகளின் போது இணையதள சேவைகள் முடக்கம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வுகளின் போது இணையதளம் முடக்கப்படுவதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது
போட்டித் தேர்வுகளின் போது இணையதள சேவைகள் முடக்கம் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

போட்டித் தேர்வுகளின் போது இணையதள சேவைகள் முடக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் போட்டித் தேர்வுகளின் போது இணையதளம் முடக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இன்டர்நெட்டை முடக்குவதற்கான நெறிமுறை குறித்து பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

சட்ட சேவை மையமான மென்பொருள் சுதந்திர சட்ட மையம் தாக்கல் செய்த மனுவில், மாநில அளவிலான மற்றும் மத்திய அரசு தேர்வுகளின் போது இணையதளம் முடக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் பிற வழக்கமான நிர்வாகக் காரணங்களுக்காக இணையதள சேவைகளை நிறுத்த வேண்டாம் என்று மாநிலங்களுக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரியுள்ளது.

இந்த மனுவில், செப்டம்பர் 2, 2017 தேதியிட்ட விரிவான உத்தரவின் மூலம், இணைய சேவைகளை இடைநிறுத்தும் அதிகாரம் மாநில ஆணையர்களுக்கு வழங்கப்படுகிறது.ஆகவே உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com