

புவனேஸ்வர்,
வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் உறுதி அளித்த பிறகும் முழு அடைப்புக்கு சில கட்சிகள் அழைப்பு விடுத்தது ஏன்? அதில் நடந்த வன்முறையால், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே பொறுப்பு.
மேலும், எஸ்.சி., எஸ்.டி. சமுதாயத்துக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது. இட ஒதுக்கீட்டு கொள்கையை மத்திய அரசு ரத்து செய்யாது. வேறு யாரும் ரத்து செய்யவும் அனுமதிக்க மாட்டோம். அதை செய்யும் துணிச்சல் யாருக்கும் கிடையாது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.