லகிம்பூர் சம்பவம்: போலீஸ் விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

லகிம்பூர் வன்முறை சம்பவம் குறித்து உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
லகிம்பூர் சம்பவம்: போலீஸ் விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
Published on

புதுடெல்லி,

லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த போலீஸ் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. விசாரணையை காவல்துறை மிக மெத்தனமாக நடத்துவதாக சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு மேலும் கூறுகையில், லகிம்பூர் வழக்கு விசாரணை நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை. தடயவியல் விசாரணை அறிக்கை கூட இதுவரை வெளிவராமல் இருக்கிறது. உத்தரப்பிரதேச அரசு இதுவரை அளித்த விசாரணை நிலை குறித்த அறிக்கையில் எதுவுமே இல்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போனைக் கூட காவல்துறையினர் இதுவரை பறிமுதல் செய்யவில்லை. லக்கிம்பூர் விவகாரத்தில் காவல்துறை விசாரணையை ஏன் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு கண்காணிக்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிப்பதாக உத்தர பிரதேச அரசு பதிலளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com