திருமண உறவில் 3வது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

திருமண உறவில் 3வது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. #SupremeCourt #KhapPanchayat
திருமண உறவில் 3வது நபர் கட்டப்பஞ்சாயத்து செய்வது சட்டவிரோதம்; சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
Published on

புதுடெல்லி,

வடமாநிலங்களில் திருமணம் முடிந்த தம்பதிக்கு எதிராக காப் பஞ்சாயத்து என்ற பெயரிலான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சக்தி வாஹினி என்ற என்.ஜி.ஓ. அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதுபற்றிய விரிவான வழிமுறைகள் மற்றும் உத்தரவை பிறப்பிக்க கோரி அதில் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இதன் மீது இன்று விசாரணை மேற்கொண்டது.

இதில், இரு மனமொத்த தம்பதியின் திருமணத்திற்கு எதிரான எந்தவொரு சட்டவிரோத முறையில் கட்டப்பஞ்சாயத்துகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. அரசு சட்டவிதிகளை உருவாக்கும் வரை இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து காப் பஞ்சாயத்து நடத்துவதற்கு விரிவான வழிமுறைகளை வகுக்க உத்தரவு பிறப்பிக்க கோரிய சக்தி வாஹினி அமைப்பின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com