பள்ளி, கல்லூரிகளில் வேதியியல் கல்வியை மேம்படுத்த திட்டம் - மத்திய அரசு தகவல்

‘ஜிக்யாசா’ திட்டத்தில் இணைந்து பணியாற்ற உறுதியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் வேதியியல் கல்வியை மேம்படுத்த திட்டம் - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேதியியல் கல்வியை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஆதரவாக ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் 30-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில், ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி நடத்திய பரிசோதனையில் நாடு முழுவதுமிருந்து 2,000 மாணவர்கள் பங்கேற்றனர்.

அப்பேது, பள்ளி குழந்தைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை இலக்காக கொண்ட நாடு தழுவிய மேம்படுத்தப்பட்ட திட்டமான 'ஜிக்யாசா' திட்டத்தில் இணைந்து பணியாற்ற உறுதியளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரண்டு அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com