மோட்டா சைக்கிள் மோதி பள்ளி மாணவி படுகாயம்

ஆட்டோவுக்கு காத்திருந்தபோது மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவி படுகாயமடைந்தாள்.
மோட்டா சைக்கிள் மோதி பள்ளி மாணவி படுகாயம்
Published on

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டல் பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகள் பாத்திமா நிதா (வயது 10). இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி வழக்கம் போல் ஆட்டோவுக்காக அந்த பகுதியில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தறிகெட்டு ஓடி, சிறுமி மீது மோதியது.

மேலும், சிறுமியை சிறிது தூரத்திற்கு இழுத்து சென்றது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமியை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பது தெரிந்துள்ளது. இதையடுத்து வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com