தேசிய கல்விக்கொள்கையின் ஒருபகுதியாக பள்ளி நிர்வாகக் குழு வழிகாட்டுதல்கள் வெளியீடு

உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பை அதிகரிப்பது இதன் முதன்மை நோக்கமாக உள்ளது.
தேசிய கல்விக்கொள்கையின் ஒருபகுதியாக பள்ளி நிர்வாகக் குழு வழிகாட்டுதல்கள் வெளியீடு
Published on

புதுடெல்லி,

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், பள்ளி நிர்வாகக் குழுக்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தினார். தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் இலக்குகளை அடைவதற்காக இலக்குகளாக இது பார்க்கப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தில் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பை அதிகரிப்பது இதன் முதன்மை நோக்கமாக உள்ளது.

பள்ளியின் தினசரி செயல்பாடுகள் மற்றும் நிதி மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருதல். ஒவ்வொரு பள்ளியும் தங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் குறித்து ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தல். டிஜிட்டல் கற்றல் வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆசிரியர்களின் வருகை மற்றும் மாணவர்களின் கற்றல் விளைவுகளை தொடர்ந்து கண்காணித்தல். மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது மற்றும் இடைநிற்றலைத் தடுப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும் உள்ளிட்டவை இந்த புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com