

அந்த கடிதத்தில், சாமான்ய மக்களின் துயரங்களை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு ஆக்சிஜன் வினியோகத்தை சீர்படுத்த உத்தரவிட்டதை தெரிந்து கொண்டேன். நீதிமன்ற உத்தரவால் இன்று நிறைய உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. நீதிபதிக்கு எனது நன்றி குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்து தலைமை நீதிபதி ரமணா, உனது கடிதத்துடன், நீதிபதியின் பணியை சித்தரிக்கும் மனதுக்கு இதமான ஓவியமும் கிடைக்க பெற்றேன். நீ வருங்காலத்தில் நிச்சயமாக விழிப்புடன் கூடிய பொறுப்பான குடிமகளாக வளர்வாய் என பரிசு அனுப்பி பாராட்டினார்.