நடுரோட்டில் பள்ளிச் சிறுமியை நிர்வாணமாக்கி அத்துமீறல் : உதவி கோரி கதறிய கொடுமை

பீகார் மாநிலத்தில் நடுரோட்டில் பள்ளிச் சிறுமியின் ஆடைகளைக் களைந்து அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடுரோட்டில் பள்ளிச் சிறுமியை நிர்வாணமாக்கி அத்துமீறல் : உதவி கோரி கதறிய கொடுமை
Published on

பாட்னா,

பீகார் மாநிலம் சஹர்சா நகரில் நடுரோட்டில் பள்ளிச் சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் மானபங்கப்படுத்துவதும் அத்துமீறுவதுமான வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. அந்த சிறுமி உதவி கோரி கதறும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஒருவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பள்ளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.

அந்த வீடியோவில் சைக்கிளில் செல்லும் ஒரு சிறுமியை ஒரு கும்பல் சாலையின் ஓரம் தடுத்து நிறுத்துகிறது. குழுவில் ஒருவர் அவளைக் காப்பாற்ற முயற்சிக்கும்போது, மற்றவர்கள் அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்கிறார்கள். கும்பலில் சிலர் அந்த சிறுமியின் துப்பட்டாவை பறிக்கிறார்கள்

சஹர்ஸா டிஎஸ்பி பிரபாகர் ரிவாரி கூறியதாவது:- ஒரு பள்ளி மாணவியை அவரது ஆண் நண்பர் சிலர் தவறாக நடத்தி உள்ளனர். அது குறித்த வீடியோ வெளியானது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் குறித்து அடையாளம் தெரிந்து உள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com