

புதுச்சேரி,
புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (அக். 26) அர்னாப் புயலாக மாறி ஆந்திர பிரதேசத்தின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை (அக். 26) விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இதேபோல், காரைக்காலிலும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.