வன்முறை காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை மணிப்பூரில் பள்ளிகள் மூடல்..!

மணிப்பூரில் பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி வரை மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வன்முறை காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை மணிப்பூரில் பள்ளிகள் மூடல்..!
Published on

மணிப்பூர்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.

இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள பள்ளிகள் ஜூன் 15-ம் தேதி வரை மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com