கொரோனா பரவல் எதிரொலி: பீகாரில் ஏப்ரல் 11-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

கொரோனா பாதிப்பு எதிரொலியாக, ஏப்ரல் 11-ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாட்னா,

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் கொரோனா பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு எதிரொலியாக, ஏப்ரல் 11-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில் நடத்தப்பட வேண்டிய பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க நடத்தப்படலாம் என்றும், பொது நிகழ்ச்சிகளுக்கும் மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்க, உயர்மட்ட கூட்டத்தில் முதல்-மந்திரி நிதீஷ்குமார் அதிகாரிகளை கலந்தாலோசித்ததைத்தொடர்ந்து, மாநில அரசின் நெருக்கடி நிர்வாக குழு இந்த முடிவு எடுத்துள்ளது.

மேலும் இறப்பு அல்லது பிற சடங்குகளைத் தவிர்த்து பொது இடங்களில் எந்தக் கூட்டங்களும் அனுமதிக்கப்படாது, இறுதிச் சடங்குகளில் அதிகபட்சம் 50 பேரும், திருமண விழாக்களுக்கு 250 பேரும் அனுமதிக்கப்படுவார்கள்.

அரசாங்க அலுவலகங்களில், பொது மக்களின் நுழைவு தடைசெய்யப்பட்டு, பொது போக்குவரத்தில் 50 சதவீதம் மட்டுமே ஏப்ரல் 5 முதல் 15 வரை அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com