அசாமில் 20ந்தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு

அசாமில் வருகிற 20ந்தேதி முதல் அனைத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என முதல் மந்திரி கூறியுள்ளார்.
அசாமில் 20ந்தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு
Published on

கவுகாத்தி,

அசாமில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைய தொடங்கிய சூழலில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, அசாமில் வருகிற 20ந்தேதி முதல் அனைத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும்.

இதற்காக பள்ளி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் முழு அளவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com