

திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 1-ந் தேதி, 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க கேரள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, கேரளாவில் நாளை முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 15 ஆம் தேதி முதல் 9 மற்று, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநில பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.