காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டி - வைரல் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டி - வைரல் வீடியோ
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் டேராடூன் மாவட்டம் விகாஸ்நகரில் கனமழை காரனமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

விகாஸ்நகரின் கட்டபதர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பாலத்தை கடந்து சென்றது. அப்போது ஸ்கூட்டரில் வந்த இளைஞர் தரைப்பாலத்தை கடக்க முயன்றார். ஆனால், காட்டாற்று வெள்ளத்தில் அந்த இளைஞரின் ஸ்கூட்டர் சிக்கியது. இதில் ஸ்கூட்டருடன் அந்த இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். பின்னர், சிறிது நேரத்தில் கிராம மக்கள் இளைஞரை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com