இந்திய கப்பற்படையில் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் வருகிற நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் இணைகிறது

இந்திய கப்பற்படையில் கல்வாரி என்ற நீர்மூழ்கி கப்பல் வருகிற நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் இணைகிறது.
இந்திய கப்பற்படையில் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் வருகிற நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் இணைகிறது
Published on

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வாரி என்ற ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல் ஆனது பிரான்ஸ் கப்பல் படை மற்றும் டி.சி.என்.எஸ். என்ற நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் வடிவமைக்கப்பட்டது. அதனை அடுத்து மஜகான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் உதவியுடன் கப்பல் உருவாக்கப்பட்டு உள்ளது.

கப்பல் கட்டும் பணியில் உள்நாட்டு பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதில் இந்திய கப்பற்படை ஆர்வமுடன் உள்ளது. நீர்மூழ்கி கப்பல்களிலும் உள்நாட்டு பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளோம். இத்தகைய பயன்படுத்துதல் ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகளிலும் அதிகரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கல்வாரி நீர்மூழ்கி கப்பலானது தனது 110 நாட்கள் சோதனை ஓட்டத்தினை முடித்துள்ளது. கப்பலில் பயணிப்பதற்கு முன்புள்ள பிற சோதனை ஓட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், மஜகான் கப்பல் கட்டும் நிறுவனம் கடந்த 4 நாட்களுக்கு முன் இந்த நீர்மூழ்கி கப்பலை இந்திய கப்பற்படையிடம் ஒப்படைத்துள்ளது. இது வருகிற நவம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் இந்திய கப்பற்படையில் இருந்து இயங்கும் என எதிர்பார்த்து இருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com