குஜராத்தில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

ரத யாத்திரையில் உள்துறை மந்திரி அமித்ஷா குடும்பத்துடன் கலந்துகொண்டார்
குஜராத்தில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Published on

அகமதாபாத்,

ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகநாதர் கோவிலை போன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் ஜெகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் ரத யாத்திரை மிகவும் பிரபலம் ஆகும். புரி ஜெகநாதர் கோவில், கொல்கத்தா ஜெகநாதர் கோவிலுக்கு அடுத்தபடியாக அகமதாபாத் ஜெகநாதர் கோவிலில் ரத யாத்திரையின் போது அதிக அளவில் பக்தர்கள் குவிகின்றனர்.

இந்நிலையில், அகமதாபாத் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடைபெற்று வருகிறது. 400 ஆண்டுகள் பழைமையான இந்த கோவிலில் இன்று நடைபெற்ற ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

18 யானைகள், 100 வாகனங்களை கொண்டு ரதம் இழுத்து செல்லப்பட்டது. பக்தர்களும் ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். இந்த ரத யாத்திரையில் உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com