நிரவ் மோடியின் பண்ணை இல்லத்துக்கு ‘சீல்’ சி.பி.ஐ. நடவடிக்கை

வங்கி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நிரவ் மோடியின் பண்ணை இல்லத்துக்கு சி.பி.ஐ. நேற்று ‘சீல்’ வைத்தது.
நிரவ் மோடியின் பண்ணை இல்லத்துக்கு ‘சீல்’ சி.பி.ஐ. நடவடிக்கை
Published on

மும்பை,

மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில், அலிபாக் என்ற இடத்தில் அரபிக்கடலை ஒட்டி 1 ஏக்கர் பரப்பளவில் இந்த பண்ணை இல்லம் அமைந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு, ரூ.32 கோடிக்கு நிரவ் மோடி இதை வாங்கினார். தனது நகைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக இங்கு அவர் அவ்வப்போது விருந்து நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

பண்ணை இல்லத்தில், 5 படுக்கையறைகளுடன் 12 ஆயிரம் சதுர அடியில் மிகப்பெரிய பங்களா அமைந்துள்ளது. பெரிய நீச்சல் குளம், தியேட்டர், நூலகம் ஆகியவையும் உள்ளன. நிரவ் மோடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து இந்த சொத்தை சி.பி.ஐ. கண்டுபிடித்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com