ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை

File image
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகிலுள்ள பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் பாதுகாப்புப்படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கையானது குர்சாயில் உள்ள பமர்னார், கிகர் மோர், ஜப்தான் காலி, ஹர்னி, கஸ்பலாரி மற்றும் பாப்லியாஸ் வனப்பகுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Related Tags :
Next Story






